இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை (15 நவ 2021): இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்து கலக்கியிருந்த இதன் இரண்டாம் பாகம் மீண்டும் கமல் நடிக்க விபத்து காரணமாகவும், தயாரிப்பு தரப்பு காரணமாகவும் படபிடிப்பு தடை பட்டிருந்தது.

தற்போது ஷங்கர் ராம்சரன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தாகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, அதில் நடித்த விவேக் திடீரென காலமானதால் அவருக்கு பதில் வேறு நடிகரையும், காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அவருக்கு பதில் த்ரிஷாவையும் வைத்து மறு படப்பிடிப்பு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply