இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானு-க்கு நோட்டீஸ்!

ARR 1

சென்னை (19 ஜூலை,2020):கடல்புறா படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் பாபு கணேஷ். தொடர்ந்து இரவு பாடகன், தீர்ப்புகள் மாற்றப்படும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், திரையரங்குகளில் முதல்முறையாக திரைப்பட காட்சியுடன் இணைந்த வாசனையை அறிமுகப்படுத்தினார்.

ARR 1
ARR 1

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கான்செப்டை பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பாபு கணேஷ். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளாகின்றன. கடந்த 2000-ம் ஆண்டில் நாகலிங்கம் என்ற திரைப்படத்தை சாம்பிராணி வாசனையுடன் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட்டேன். அது லிம்கா உள்ளிட்ட பல சாதனை பட்டியலில் இடம்பெற்றன.
2012-ம் ஆண்டு அதே கான்செப்டை பயன்படுத்தி நானே வருவேன் என்ற பேய் படத்தில் சூழலுக்கேற்ப தாழம்பூவின் மணத்துடன் திரைப்படம் உருவாக்கி திரையிட்டேன். அதைத்தொடர்ந்து காட்டுப்புறா என்ற உலகில் முதல் வாசனை குழந்தைகள் திரைப்படத்தை உருவாக்கினேன்.
இதே கான்செப்டை வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் லீ மஸ்க் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். என்னுடைய கான்செப்டை பயன்படுத்தியதற்காக அவருக்கு இ-மெயில், கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டேன். மேலும் இயக்குநர் சங்கம், இசைக்கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல வழிகளில் அவரிடம் விளக்கம் கேட்டும் பதிலில்லை.
இதனால் விளக்கம் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கான்செப்ட் திருட்டு என்ற அடிப்படையில் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று கூறியிருக்கின்றார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply