தோனி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்த தற்கொலை!

மும்பை (14 ஜூன் 2020): சினிமாவில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக தனது சினிமா பயணத்தை துவக்கி, பின் டிவி தொடர்களில் நடித்தார். கை போ சே என்ற படத்தில் மூன்ற நாயகர்களில் ஒருவராக நடித்தவர் அமீர்கானின் பி.கே படத்திலும் நடித்தார்.

பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனியில், தோனியாகவே நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து ராப்டா, கேதர்நாத் போன்ற படங்களில் நடித்தார்.

இவரது முன்னாளர் மேலாளர் திஷா ஷேலியன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்தார். அப்போதிருந்தே சற்று அதிருப்தியிலும், தீவிர மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் தோனி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்: