கடுமையான வீழ்ச்சியில் தவிக்கும் மெக் டொனால்டு நிறுவனம்!

கடுமையான வீழ்ச்சியில் தவிக்கும் மெக் டொனால்டு நிறுவனம்!

குவைத் (06 பிப்ரவரி 2024): கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் மெக் டொனால்டு நிறுவனம், தமது வீழ்ச்சிக்குக் காரணமாக இஸ்ரேலைக் குற்றம் சுமத்தியதோடு, தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. துரித உணவுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றது McDonald’s நிறுவனம். கடந்த அக்டோபர் 2023 இல், காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த சமயத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு தாம் இலவசமாக உணவு வழங்குவதாக McDonald’s இன் இஸ்ரேலிய உணவகம் ஒன்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது….

மேலும்...
Qatar kite festival to be held from January 25

கத்தாரைக் கலக்கும் காத்தாடி திருவிழா!

தோஹா, கத்தார் (03 ஜனவரி 2023): கத்தார் நாட்டில்  ராட்சத பட்டங்களைப் பறக்கவிடும் காத்தாடி திருவிழா (kite festival) வின் இரண்டாவது பதிப்பு, எதிர்வரும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3, 2024 வரை நடைபெற உள்ளது. இது, பழைய தோஹா துறைமுகத்தில் நடைபெறும். சமீபத்தில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி: இந்த காத்தாடி திருவிழா-வில் உலகம் முழுவதிலுமிருந்து 60 பங்கேற்பாளர்கள் இதில் இடம் பெறுகின்றனர். இவர்கள் தயாரித்து…

மேலும்...
வயிற்றுக்குள் மறைத்து போதை மருந்து கடத்தல்

கத்தாரில் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல்!

தோஹா, கத்தார் (25 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவின் ஹாமத் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல் செய்ததை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பயணியின் நடவடிக்கை பற்றி சுங்கப் பரிசோதகருக்கு எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, பயணி மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சினிமா பாணியில் ஹெராயின் கடத்தல்: காவல்துறையினர் மேற்பார்வையில், தனியறையில் நடந்த பரிசோதனையின் முடிவில், பயணியின் வயிற்றில் 376 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 107…

மேலும்...

உலகக் கோப்பை – கத்தாரில் கண்ணியமாக நடத்தப்பட்டேன் – மேற்கத்திய பெண்ணின் நேர்காணல்!

கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது அனைவரும் அறிந்த சங்கதி. தற்போது போட்டி முடிவடைந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய ரசிகர்கள், உள்ளூர் ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்கள், வெறுப்பை பரப்பிய ஊடகங்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டிருக்கின்றன. “என் போன்ற இளம் பெண்களுக்கு கத்தர் ஓர் ஆபத்தான இடம் என எண்ணி மிகவும் பயந்திருந்தேன். மது இல்லாத காரணத்தால், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி,…

மேலும்...

ப்ளூடூத் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை!

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம். எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு…

மேலும்...

The Kashmir Files – ஆபத்தான சினிமா!

அரசியல் மற்றும் உண்மைச் சம்பவங்கள் குறித்தான படங்களை பெரும்பாலும் இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடலாம். சில திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பான பிரசாரத் தொனி எட்டிப் பார்க்கும். சில படங்கள் ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து, அது தொடர்பாக நம்மைச் சிந்திக்க வைக்கும். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் வரும் காட்சிகள் உண்மை என்ற பெயரில் வன்மத்தை ஆங்காங்கே விதைத்து நம்மை ஒருவித மன உளைச்சலுக்குள் தள்ளிவிடுகிறது. 1990களில் நடந்த காஷ்மீரி பண்டிட்களின் படுகொலைகள் நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று. அவர்கள்…

மேலும்...

நடிகர் சூர்யாவால் டாக்டரான மாணவி!

சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இருளர் இன மக்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனை திரைப்பட பிரமோஷன் என்றும் கூறுகின்றனர் சிலர், ஆனால் அவரின் சமூக பங்களிப்பு 2006 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனலாம். கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா…

மேலும்...

லிங்க முத்திரை யோகா செய்ங்க, கொரோனாவ கொல்லுங்க – ஐ ஐ ட்டி சென்னை!

கொரோனாவுக்கு மூச்சை இழுத்து விட்டால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். – மோடிஜி கொரோனா பாதிக்கப்பட்டவங்களோட குடும்பம் அரச மரத்தடில போய் கிடந்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும் – யோகிஜி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோமூத்திரம் கொடுத்தால் போதும். ஓடிவிடும்- சங்கி ஜி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரண்டு வேளை 20 நிமிடங்கள் லிங்க முத்திரை யோகா செய்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். மூன்று நாட்களில் குணமாகிவிடலாம் – சென்னை ஐ ஐ டி புரஃபசர் மணிவண்ணன்ஜி ஆக்ஸிஜன் உற்பத்தி…

மேலும்...

யார் இந்த சித்தார்த்? மோடி அரசை எதிர்க்க காரணம் என்ன? – பரபரப்பு பின்னணி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்க மத்திய அரசின் கையாலாகதத் தனத்தை உலக நாடுகள் கண்டித்தப்படி உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அதேவேளை திரையுலக பிரபலங்கள் அனைவரும் மவுனம் சாதிக்கின்றனர். ஆனால் நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கு பாஜகவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்., ஆனால் தனது மத்திய அரசிற்கு எதிரான கேள்விகள் தொடரும்…

மேலும்...

அனைத்து நிறுவனங்களும் இந்தியாவைக் கைவிட்டு விட்டன – உச்சநீதிமன்ற பார் தலைவர்!

வயர் இணைய இதழில் கரண் தாப்பர் உச்ச நீதிமன்ற பார் அசோஷியேசனின் மேனாள் தலைவர் துஷ்யந்த் தாவேவை பேட்டி கண்டுள்ளார். கோவிட் பேரலை சூழ்ந்துள்ள மிக மோசமான சமயத்தில் மோடி அரசு எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைவிட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கும் தாவே, இந்த தருணத்தில் திருவாளர் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியைத் துரத்துவதாகவே அமைந்துள்ளது என்கிறார்.. இதை விரிவாக விளக்கும் போது இந்த ஆளுகையின் முக்கிய குறைகளாக அவர் குறிப்பிடும் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்….

மேலும்...