பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!

க்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? – ராஜன்

மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்? – ரபீக் ராஜா

அத்வானிஜியை ஓரங்கட்டியது குறித்து எப்போதேனும் வருந்தியதுண்டா? – பத்மஜா

பிரதமர் என்பவர் நாட்டின் அனைத்து மக்களையும் நலமாக வாழ வைக்கும் பொறுப்பில் உள்ளவர். ஆனால் நமது நாட்டில் மதம், ஜாதி பாகுபாட்டால் அற்பகாரணங்களுக்கெல்லாம் அநியாயமாக பலர் கொல்லப்படுவதற்கு எதிராக சின்னதாக ஒரு அசைவுக்கூட இல்லாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது! என்ன நடித்தாலும் உலக சரித்திரத்தில் பின்னாளில் தூற்றப்படுவீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? – பசுமை ஹாஜி

ஒருவேளை அடுத்தத் தேர்தலில் தோற்றுவிட்டால், பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக அப்போதைய ஆட்சிக்கு எதிராக பேசுவீர்களா? – துளசி

EVM துணை இல்லாமல் வாக்கு சீட்டு தேர்தலைச் சந்திக்க தயாரா? – நூஹு கான்

எப்பொழுதாவது உண்மை பேசியது உண்டா? – ஜின்னா Msm

ஏழைத் தாயின் மகனாக இருந்துகொண்டு, மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு ஆடம்பரமாக வலம்வருவதற்குக் கூச்சமாக இல்லையா? ஏன், எளிமையான பிரதமராக நீங்கள் காட்டி கொள்ளக்கூடாது? அதுகூட நல்ல விளம்பரம்பெற்று தருமே? – முருகன்

எப்போது இந்த நாட்டிற்குச் சர்வாதிகார ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைக்கும்? – ரஃபீக் அஹ்மத்

வாழ்வில் உண்மையைப் பேசும் வாய்ப்பு கிடைக்குமென கருதுகிறீர்களா? – செய்யது அஹமது ரியாஸ்

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் கறுப்பு கொடி காட்டப்படுவதையும் கோ பேக் மோடி ட்ரன்ட் ஆவதையும் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? – எட்வர்ட்

இவ்வளவு பெரிய வளர்ச்சி நாயகனாக பிம்பம் பெற்றுள்ள நீங்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காமல் இருப்பது/மறுப்பது உங்கள் சுய முடிவா அல்லது யாரேனும் உங்களைக் கட்டாயப்படுத்தி அப்படி இருக்க வைத்துள்ளார்களா? – முஹம்மது ஷிஃபான் ஷமீம்

நீங்கள் இதுவரை அறிவித்துள்ள திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென தெரியுமா? – யூசுஃப் அலி

நீங்கள் நாட்டின் பிரதமரா அல்லது குஜராத் கம்பெனிகளின் மேலாளரா? – கதீப் மமூனா லெப்பை

உங்களுக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் பாகிஸ்தான் எல்லையில் பதற்றமோ அல்லது ஏதேனும் குண்டுவெடிப்பு அசம்பாவிதங்களோ நடப்பது எப்படி? – கணேசன்

வெளிநாடுகளிலும் பொது வெளியிலும் அடிக்கடி தமிழின் சிறப்பைப் பேசும் நீங்கள், எங்கள் தமிழுக்காக இதுவரை செய்தது என்ன? – ரஃபீக் பிலால்

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அடுத்த கட்சி MLA க்களை வளைத்துப் போட்டு ஆட்சி அமைக்கிறீர்களே, அருவருப்பாக இல்லையா? – அபு பக்கர்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கோரி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதைக் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? – மீரா

வெற்று விளம்பரமும், பொய்யும், நடிப்பும் தான் ஒரு பிரதமருக்கான தகுதி என்று கருதுகிறீர்களா? – முஹம்மது பஷர்

உங்கள் ஆட்சிகாலம் முடிவதற்குள் டாலருக்கு இணையாக ரூபாயின் மதிப்பு வந்துவிடுமா? – முருகேசன்

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்ற செய்தி அறிந்தபோது மனநிலை எப்படி இருந்தது? – காதர் முஹையத்தீன்

நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் எழுதிப் பெறாமல் ஒரு பத்து நிமிடம் பேச முடியுமா? – பொறியாளர் ஹிதாயத்துல்லாஹ்

வருமான வரித்துறையினர் பாஜக தலைவர்கள் வீட்டின் பக்கமே போகமாட்டேன்கிறார்களே, ஏன்? – ரமேஷ்

மாட்டுக்கறி ஏற்றுமதியைத் தடை செய்யும் தைரியம் வராதது ஏன் ? குறிப்பாக சைனாவுக்கு இன்னும் ஏன் மாட்டுக்கறி ஏற்றுமதி செஞ்சுகிட்டு இருக்கிறீங்க? – சாது சாதத்

அந்த 15 லட்சம்? – அன்வர் கோட்டை

பெட்ரோல் விலை காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த நிலைக்காவது வருவதற்கான சாத்தியமிருக்கிறதா? – கருப்பன்

உங்களைத் தோற்கடிப்பதற்குச் சக்தியில்லாத எதிர்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகவாவது, தேர்தலை மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் கொண்டு வருவீர்களா? – ஜாஃபர் அலி

கார்ப்பரேட்டுகளிடமிருந்து அதிகம் பணம் நன்கொடை பெற்ற பாஜகவின் ஆட்சி, கார்ப்பரேட்டுகளுக்கு இதுவரை ஏதேனும் பிரதி உபகாரம் செய்துள்ளதாக நினைக்கிறீர்களா? – பீட்டர்

இந்தியாவை யார் ஆட்சி செய்தால் முன்னேறும் என்று நினைக்கின்றீர்கள்? – மு. அ. முஹம்மது ஜமால்தீன்

இந்தியாவுல இன்னும் விற்பதற்கு ஏதாவது பாக்கி இருக்கிறதா? – அப்துல் ஹக்கீம்

காளான் டேஸ்ட் எப்படி? – சந்திரகுமார்

2000 க்கு மேற்பட்ட மக்கள் கதறக் கதற கொல்லப்பட்டதில், உங்கள் மனம் சிறிதளவுகூட உறுத்தலையா? – தாஜுதீன் அஹ்மது

நீங்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கும்போதெல்லாம் அம்பானியோ அதானியோ உங்களுடன் வர அனுமதிப்பதற்கான காரணமென்ன? – சசி

சிறு சலனம்கூட இல்லாமல் அமைச்சரவையையும், அரசையும் 6 வருடங்களாக எப்படி நடத்திக் கொண்டுபோக முடிகிறது? – அப்துல்றஹ்மான் காரைக்கால் மண்டபம்

பிரதமராக நீடிக்க உங்களுக்கு தகுதி இருக்கா? – அப்பாஸ் புதுவை

ஒரு முறையாவது உண்மை பேசியதுண்டா? – ஹுஸைன் சிக்கந்தர்

அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்திலுமே அசம்பாவிதங்கள் நிகழ்ந்து, காவல்துறையினரால் அவை ஒடுக்கப்படுவதன் ரகசியம் என்னவென நினைக்கிறீர்கள்? – குமார்

Open press meet எப்போ நடத்துவீங்க? – அபூ ஹுமைரா

நீங்கள் இந்தியாவுக்குக்கான பிரதமரா? தூதுவரா? – மேலப்பாளையம் செய்யது

இவ்வளவு நீண்டநாட்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அந்த மசோதாக்களை விடாப்பிடியாக பிடித்து கொண்டிருப்பது ஏன்? – மகேஷ்

50 நாட்களில் தீக்குளிப்பேன் எனச் சொன்னதை எப்போதேனும் மீண்டும் நினைத்துப் பார்த்ததுண்டா? – தீபா

பண மதிப்பிழப்பின்போது ஒருவருக்கு அதிகப்பட்சம் 2000 ரூபாய்தான் எடுக்க முடியுமென்ற நிலையில், பாஜக பிரமுகர்கள் வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் புது நோட்டுகள் வந்தது எப்படி? – ராஜா

எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் உங்கள் கண்கள் கேமராவையே நோட்டமிடுவது ஏன்? – மதி

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply