அதிமுகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவைவிட பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்திக்காட்டும் முயற்சியில் கோவை திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி களிப்பில் திளைத்த திமுகவுக்கு அதே கோவையில் அதிமுக கூட்டிய மாபெரும் பொதுக்கூட்டம் அதிர்ச்சியை கொடுத்தது. அதிமுகவின் அதிரடி, அரசியல் அரங்கில் அதிர்வையும் ஏற்படுத்தியது. எதையும் பிரமா ண்டமாக செயல் படுத்தும் திமுக சளைக்குமா என்ன? இதோ களம் இறங்கிவிட்டதாக அடுத்தடுத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வுக்குப் பதிலடி கொடுக்க கோவையில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்திக்காட்ட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏற்றாற்போல் கோவையில், "டைடல் பார்க்' திறப்பு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திறந்து வைப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. முன்னதாக மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திருப்பூரில் நடத்தும் பாராட்டு விழாவிலும் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தற்போது எதிர்பாராதவிதமாக, முதல்வர் கருணாநிதியே கோவை, "டைடல் பார்க்'கை திறந்து வைப்பதாக, நிகழ்ச்சி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
விழாவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென முதல்வர் வருவதாக நிகழ்ச்சி அறிவிக்கப் பட்டிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதே நாளில் கோவையில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்தவும் தி.மு.க. அதிரடியாக ஏற்பாடு செய்து வருகிறது. கோவை வ.உ.சி., பூங்காவில் பிரமாண்ட மக்கள் கூட்டத்தை திரட்டிக்காட்ட ஆளும் கட்சியினர் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

எழுதியவர்: K GOPAL, July 31, 2010
The DMK Government should do something for the poor and innocent people of Taqmilnadu at;east tilll the completion of assembly elections, because the DMK is not only minority government but it is fully dominated by the majority members of the CMs family. In a democratic set up it is not advisable. People have the view that CM is always thinking only anout the upliftment of his family. They are talking good Tamil but they do nothing for the innocent Tamils and also for fhe Tamil language
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 



